ஷேன் நிகாம் 
செய்திகள்

மெட்ராஸ்காரன் டீசர் அறிவிப்பு!

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும் மெட்ராஸ்காரன் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

எஸ் ஆர் புரடக்‌ஷன் சார்பில் பி. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் தெலுங்கு நாயகி நிஹாரிகா கொனிடேலா இணைந்துள்ளார். இவர் நடிகர் வருண் தேஜின் தங்கை, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் வேதா, கைதி, பார்க்கிங் ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இதன் டிசர் ஜூலை 24ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை உலக புத்தொழில் மாநாட்டை தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்!

சந்திரசேகர் ராவ் மகன் வீட்டுக் காவலில் அடைப்பு!

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்தது யார்?: ஆட்சியர் விளக்கம்

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

SCROLL FOR NEXT