செய்திகள்

விடாமுயற்சி: புதிய தகவல்!

DIN


நடிகர் அஜித் குமார் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் மகிழ்த்திருமேனி இயக்கிவருகிறார். தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அஜித் குமாரை இவர் இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித் குமாருடன் நடிகர் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் நாளை மாலை வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

கந்தா்வகோட்டை வட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தூய்மைப் பணி

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT