நடிகர் விஷ்ணுகாந்த் இன்ஸ்டாகிராம்
செய்திகள்

தோசை சுட்டு மன்னிப்பு கேட்கும் சீரியல் நடிகர்!

விஷ்ணுகாந்த் உடன் நடிகை தேஜஸ்வினி கெளடா நாயகியாக நடித்து வருகிறார்.

DIN

சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த் தோசை சுட்டுக்கொடுத்து மன்னிப்பு கேட்கும் விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தோசை மாவைக் கொண்டு ’சாரி’ என ஆங்கிலத்தில் எழுதி அதனை தோசைப்போன்று சுட்டுக் கொண்டுக்கிறார். இந்த விடியோ பதிவின்போது அவரின் நண்பர்களும் உடன் இருப்பதால், இந்த விடியோ, சீரியலுக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிப்பிக்குள் முத்து' தொடரில் நடித்ததன் மூலம் ஏராளமான பெண் ரசிகர்களைக் கவர்ந்தார்.

குடிகண்டலு தொடரில் நடிகை தேஜஸ்வினி - விஷ்ணுகாந்த்

2018-ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் விஷ்ணுகாந்த் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, 2022-ல் 'என்றென்றும் புன்னகை' தொடரில் நடித்தார். எனினும், 2022ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் 'சிப்பிக்குள் முத்து' தொடரில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.

இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் கிடைத்த நிலையில், திடீரென தனது திருமணத்தை அறிவித்து, அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். எனினும், சின்னத்திரை நடிகை சம்யுதா உடனான அந்த திருமண வாழ்க்கையை விவாகரத்தில் முடித்துக்கொண்டு மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

குடிகண்டலு தொடரில் தேஜஸ்வினி - விஷ்ணுகாந்த் காதல் காட்சிகள்

தற்போது 'குடிகண்டலு' என்ற தெலுங்கு மொழித் தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இத்தொடர் ஆந்திரம், தெலங்கானாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

விஷ்ணுகாந்த் உடன் நடிகை தேஜஸ்வினி கெளடா நாயகியாக நடித்து வருகிறார். இந்தத் தொடரில் இருவரின் காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் ஏராளம. இவர்களின் விடியோ இன்ஸ்டாகிராமில் பல சினிமா காதல் பாடல்களுடன் வைரலாவது வாடிக்கை.

தேஜ்ஸ்வினி / விஷ்ணுகாந்த்

இந்நிலையில், நடிகர் விஷ்ணுகாந்த் தோசை சுட்டு மன்னிப்பு கேட்கும் விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த விடியோவில் விஷ்ணு உடன் நடிப்பவர்கள் இருப்பதால், சீரியல் காட்சிக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அடிக்கடி கோவம்கொள்ளும் தேஜ்ஸ்வினியை சமாதானம் செய்ய, சாரி என ஆங்கிலத்தில் தோசையாக சுட்டுக்கொடுக்கும் விஷ்ணுவுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT