கிரிக்கெட் விளையாடும் சிவகார்த்திகேயன் படங்கள்: எக்ஸ் / எஸ்கே சுவேதா.
செய்திகள்

கிரிக்கெட் விளையாடும் சிவகார்த்திகேயன்..! சேவாக் மாதிரி இருக்கிறதா?

நடிகர் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் விளையாடும் விடியோ வைரல்.

DIN

தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், 'மெரினா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார்.

தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார். கடந்த ஜூன் 2-ஆம் தேதி மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் விளையாடும் விடியோ வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் மாதிரி கிரிக்கெட் விளையாடும் விடியோ வைரலாகி வருகிறது. இது முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் விளையாடுவது போலுள்ளதாக கமெண்டுகளில் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கிரிக்கெட் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT