ராயன் பின்னணி இசையில் கலக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் படங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான், சன் பிக்சர்ஸ் / எக்ஸ்
செய்திகள்

பெரிய பாய் சம்பவம்..! ராயன் பின்னணி இசையில் அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

ராயன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து.

DIN

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் இன்று (ஜூலை 26) திரையில் வெளியாகியுள்ளது. கேங்ஸ்டர் பின்னணியில் உருவான இப்படம் ஏ சான்றிதழுடன் திரைக்கு வருவதால், ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

சமீபத்தில், டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வரவேற்பைப் பெற்றுள்ளன. முக்கியமாக, வாட்டர் பாக்கெட், அடங்காத அசுரன் பாடல்கள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன.

படக்குழு ராயன் திரைப்படம் பார்க்க சென்னை ரோஹிணி தியேட்டரில் வந்தனர்.

படம் பார்த்த ரசிகர்கள் விடியோக்களை எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் படம் சிறப்பாக இருக்கிறதென்றும், பெரிய பாய் சம்பவம் என்றும் புகழ்ந்து வருகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானை பெரிய பாய் என்று அழைப்பது சமூக வலைதளத்தில் பரவலாக பயன்படுத்தும் சொல்.

பின்னணி இசையில் கலக்கியிருப்பதாக பலரும் தங்களது கருத்தினை சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே ராயன் படத்தில் வரும் உசுரே நீதானே பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் ரஹ்மான் சார் 30 படங்களுக்கு இசையமைப்பதாகக் கூறினார். ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

SCROLL FOR NEXT