நடிகை தமன்னா நடனமாடிய பாடல் வைரலாகி வருகிறது.
தமன்னா சினிமாவில் அறிமுகமாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. அறிமுகமான சில ஆண்டுகளில் அடைந்த பிரபலத்தைவிட இப்போது ஒருபடி மேலான புகழுடனும் மார்க்கெட்டுடனும் இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தமன்னாவின் முகம் நன்றாக தெரியத் தொடங்கிவிட்டது. லஸ்ட் ஸ்டோரிஸ் - 2, ஜீ கர்த்தா போன்ற இணையத் தொடர்களில் தமன்னாவின் கவர்ச்சி அதிகம் பேசப்பட்டது.
தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் மிகப்பெரிய ஹிட் அடித்து, எங்கெல்லாம் தமன்னா சென்றாரோ அங்கெல்லாம் காவாலா குரல்களே கேட்டன.
இந்த நிலையில், ஸ்ட்ரீ - 2 (stree - 2) என்கிற ஹிந்தி படத்தில் ஆஜ் கி ராத் (Aaj Ki Raat) என்ற பாடலுக்கு மட்டும் தமன்னா நடனமாடியுள்ளார். உடலை நன்றாக வளைத்து ஆடப்பட்ட இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் காவாலா நடனத்தை நினைவுபடுத்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.