செய்திகள்

இந்தியன் - 3 காட்சிகளை மாற்றும் ஷங்கர்?

DIN

இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 3 படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம்.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும், 180 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியன் - 2 படத்துக்குக் எதிர் விமர்சனங்கள் கிடைத்தாலும், இந்தியன் - 3 டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதனால், இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 3ல் ஏற்கனவே படப்பிடிக்கப்பட்ட காட்சிகளில் சிலவற்றை மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக நடிகர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தும் முடிவில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT