செய்திகள்

தாத்தா வராரு... பாடல் விடியோ வெளியீடு!

DIN

இந்தியன் - 2 படத்தின் கதறல்ஸ் பாடலின் விடியோவை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும், 180 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியன் - 2 படத்துக்குக் எதிர் விமர்சனங்கள் கிடைத்தாலும், இந்தியன் - 3 டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இந்தியன் - 2 படத்தில் இடம்பெற்று வைரலான, ‘தாத்தா வராரு..’ பாடலின் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பாடலை், ரோகேஷ் எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.

திரையரங்கத்தில் இப்பாடல் பலரையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (24.11.2025)

கரூர் சம்பவம்: சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வி..! சோகத்தில் ரசிகர்கள்!

ரஜினி 173 - இயக்குநரும் கதையும்?

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவி!

SCROLL FOR NEXT