இசையமைப்பாளர் அனிருத் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்தியா, இலங்கையில் நடைபெறும் இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் பிப்.7ஆம் தேதி தொடங்குகின்றன.
தனுஷின் 3 படத்தில் அறிமுகமான அனிருத் (35 வயது) தமிழின் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் இசையமைத்து பான் இந்திய இசையமைப்பாளராக மாறியுள்ளார்.
இந்தியா, இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான புதிய பாடலை உருவாக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விடியோவை அனிருத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
கிரிக்கெட் சாதாரணமான போட்டி மட்டுமே கிடையாது. அது ஒரு உணர்வு. ஐசிசியின் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பங்கு வகிப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
20 நாடுகள், ஒரே சப்தம், நிஜமான த்ரில்லர் உடன் ஆட்டத்தைப் பார்க்கலாம்.
ஐசிசி உலகக் கோப்பைக்கான அதிகாரபூர்வ பாடல் விரைவில் வரும் என்றார்.
அனிருத் இசையில் அடுத்ததாக ஜன நாயகன், எல்ஐகே, ஜெயிலர் 2, டிசி, தி கிங், அரசன் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.