தமிழ், சிங்கள மொழியில் வெளியான டி20 உலகக் கோப்பைக்கான பாடல்!
இசையமைப்பாளர் அனிருத் பாடிய ஐசிசியின் தமிழ், சிங்கள மொழி பாடல் குறித்து...
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்காக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தமிழ், சிங்கள மொழியில் பாடிய பாடல் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
தமிழ்நாடு, இலங்கையின் ஒற்றுமையைப் பாராட்டும் விதமாக இந்தப் பாடல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியா, இலங்கையில் நடைபெறும் இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் பிப்.7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
தனுஷின் 3 படத்தில் அறிமுகமான அனிருத் (35 வயது) தமிழின் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தியிலும் இசையமைத்து பான் இந்திய இசையமைப்பாளராக மாறியுள்ளார்.
இந்தியா, இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான புதிய பாடலை உருவாக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு வழங்கப்பட்டது.
ஹைசன்பர்க் எழுதிய இந்த ஐசிசியின் புதிய பாடலுக்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.
இந்தப் பாடலை ஸ்பாடிபை, ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக், ஜியோ சாவ்ன், யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூலில் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு, கேட்டு ரசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஆங்கில மொழியில் வெளியான ஐசிசிக்கான பாடல் இந்த முறை தமிழ், சிங்கள மொழியில் வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலை அனிருத் மற்றும் தினேஷ் கமேஷ் இணைந்து பாடியுள்ளார்கள்.
”இரண்டு மொழிகள், ஒரே லயத்தில். இரண்டு நாடுகள், ஒரே இதயத்துடிப்பு” என இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிவிட்டுள்ளது.
FEEL THE THRILL - ICC MEN’S T20 WORLD CUP 2026 - TAMIL SINHALESE VERSION.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.