நடிக்க மாட்டேன்: அனிருத்
அனிருத் நடிப்பது குறித்து பேசியுள்ளார்....
இசையமைப்பாளர் அனிருத் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் 15 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இசைப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். பாடகராக, இசையமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக என இந்தியளவில் செல்வாக்குடன் இருக்கும் பிரபலங்களில் ஒருவராகவும் உள்ளவர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.
Advertisement
Advertisement
இத்தனையாண்டு கால தன் இசைப் பயணத்தில் சினிமாவில் நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும், பின்னணி இசையென வந்துவிட்டால் அனிருத்தான் என்கிற சிறப்பையும் வைத்திருக்கிறார்.
லியோ திரைப்படத்திற்குப் பின் ஜெயிலர், விடாமுயற்சி, கூலி ஆகிய படங்களின் பாடல்களும் பின்னணி இசையையும் பெரிதாகக் கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் அதிகம் ரீல்ஸ் செய்யப்பட்ட இசைகள் என்கிற சாதனையையும் படைத்தன.
இந்த நிலையில், கதாநாயகனாக நடிக்க திட்டம் உள்ளதா என அனிருத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘கண்டிப்பாக நடிக்க மாட்டேன். என் ஆர்வம் இசைதான். 15 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்கு மிகப்பெரிய இடத்தைக் கொடுத்திருக்கின்றனர். இசைத்துறையில் இன்னும் சாதனைகளைச் செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.