என்னை நம்பியதற்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன அனிருத்!
முதல்வர் விஜய்க்கு இசையமைப்பாளர் அனிருத் நன்றி கூறியுள்ளார்...
இசையமைப்பாளர் அனிருத் முதல்வர் விஜய்க்கு தன் நன்றியைத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ, ஜன நாயகன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத். இப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசைகள் பெரிய கவனங்களையும் பெற்றன.
முக்கியமாக, கத்தி அறிவிப்பு விடியோவில் இடம்பெற்ற கத்தி ஸ்வாக் (swag) இசை அப்போது மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் முதல்வர் விஜய்யுடன் நடனமாடும் புகைப்படத்தை வெளியிட்ட அனிருத், “இது ஜன நாயகன், லியோ, பீஸ்ட், மாஸ்டர் மற்றும் கத்தி என மிகச்சிறப்பான உணர்ப்பூர்வ பயணமாக அமைந்தது. என் மீதான எல்லையற்ற நம்பிக்கைக்கும் நினைவுகளுக்கும் நன்றி விஜய் சார். இதனை என்றென்றும் போற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Music composer Anirudh has posted a message expressing his gratitude to Chief Minister Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.