ஃப்ரேம் பாருங்க ஜி...! ஏ. ஆர். ரஹ்மானைச் சந்தித்த அனிருத்!
ஏ. ஆர். ரஹ்மானைச் சந்தித்த அனிருத்...
இசையமைப்பாளர்கள் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் அனிருத் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான ராமாயணா திரைப்படம் நவ.5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் உலக அளவில் பல ஆயிரம் திரைகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில் மூன்றை வெளியிட்டுள்ளனர். இதில் ராவண தாண்டவம் பாடலை இசையமைப்பாளர்கள் அனிருத், ஜிவி பிரகாஷ் பாடியுள்ளனர். அப்போது, ஸ்டுடியோவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனிருத் பகிர்ந்து, “ஃப்ரேம் பாருங்க ஜி... ரஹ்மான் சாருடன் இருப்பது எப்போது சிறப்பான கொண்டாட்டமே” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Music composers A. R. Rahman and Anirudh have met.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.