ஹான்ஸ் ஜிம்மருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்: ஏ. ஆர். ரஹ்மான்
ராமாயணா நிகழ்வில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் பேசியது குறித்து...
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் ராமாயணா நிகழ்வில் ஹான்ஸ் சிம்மர் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள ராமாயணா வருகிற நவ. 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
ராமாயணத்தைத் தழுவி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அதிக பொருள்செலவில் உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் பங்களிப்பில் ஆச்சரியப்படும் வகையில் இந்த ராமாயணா உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், "சில திட்டங்கள் நம்மைத் தாண்டியவை. அவை மக்களின் வாழ்க்கையின் ஒலித்தடமாக மாறிவிடுகின்றன. பல கோடி மக்களின் அன்பு மற்றும் நம்பிக்கைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ராமாயணத்தின் இசை கவனமாக பின்னப்பட்டுள்ளது.
நமித், நிதேஷ், குமார் விஸ்வாஸ் மற்றும் எனது அற்புதமான, அயராத குழுவினருடன் பணியாற்றியது ஒரு சிறந்த பயணம். ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இசையமைத்தது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். இதன் ஒவ்வொரு கணத்தையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
Music composer A. R. Rahman spoke about Hans Zimmer at the Ramayana event.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.