42 கிலோ எடையைத் தூக்கும் சமந்தா படம்: சமந்தா / இன்ஸ்டா
செய்திகள்

42 கிலோ எடையைத் தூக்கிய சமந்தா! (விடியோ)

நடிகை சமந்தா 42 கிலோ எடையைத் தூக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் சென்றதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டார்.

அதற்காக, குதிரையேற்றப் பயிற்சி, தற்காப்புப் பயிற்சிகளை பயின்று உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 42 கிலோ எடையை தூக்குகிறார். போராட்டம் உண்மையானது எனக் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் பழையை உடல் நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளனர். அதன் முதல் படமாக, ‘மா இண்டி பங்காரம்’ உருவாகிறது. அதில் ஆக்சன் நாயகியாகவே நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT