செய்திகள்

ஐஸ்வர்யா ராயின் கை முறிவுக்கு இதுதான் காரணமா?

நடிகை ஐஸ்வர்யா ராயின் கை முறிவு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

DIN

1997இல் இருவர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். பின்னர் ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன் படங்களில் நடித்தார்.

பின்னர் ஹிந்திப் படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் எந்திரன், பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்களிடையே பேசுபொருளானார். பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. 

இதற்கிடையே, ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது பொய் என பதிலளிக்கும் விதமாக இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க ஐஸ்வர்யா ராய் விமான நிலையம் வந்தபோது அவரின் வலது கையில் எலும்பு முறிவுக்கான மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. கட்டுடனே கேன்ஸ் விழாவிலும் கலந்துகொண்டார்.

எப்படி கையில் முறிவு ஏற்பட்டது எனத் தெரியாமல் இருந்த நிலையில், இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐஸ்வர்யா ராய் வீட்டிலிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுக்கி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

மயிலாடுதுறை இளைஞர் ஆணவக்கொலை: காதலி பரப்பரப்புப் பேட்டி!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

SCROLL FOR NEXT