காதலருடன் பிரியா பவானி சங்கர்!
நடிகை பிரியா பவானி சங்கர் தன் காதலருடன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்த இவர், மேயாத மான் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, பத்து தல, ரத்னம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாது சென்னையில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பிரியா பவானி சங்கர் தன் காதலருடன் ஆஸ்திரேலியாவில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இருவரும் நீண்ட நாள்களாக காதலித்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் விரைவில் நடக்கவுள்ளதாகவும் தகவல்.