செய்திகள்

நீண்ட நாள்களுக்குப் பிறகு காதல் படத்தில் நடிக்கும் சித்தார்த்!

நடிகர் சித்தார்த்தின் புதிய பட போஸ்டரை நடிகர்கள் சிவகார்த்திகேயன், மாதவன் வெளியிட உள்ளார்கள்.

DIN

நடிகர் சித்தார்த்தின் புதிய பட போஸ்டரை நடிகர்கள் சிவகார்த்திகேயன், மாதவன் வெளியிட உள்ளார்கள்.

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தின் கதாநாயகனாக நடித்தார். முக்கியமான நடிகராக வலம் வந்தவர் அடுத்தடுத்த தோல்விப் படங்களைக் கொடுத்ததால் மார்க்கெட் இழந்தார்.

ஆனால், சித்தா படத்தின் வெற்றிக்குப் பின் நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்தெடுத்துள்ளாராம்.

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதை சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

தற்போது காதல் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கு மிஸ் யூ எனப் பெயரிட்டுள்ளார்கள். இந்தப் படத்தினை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரடக்‌ஷன்ஸ் தயாரிக்க ராஜசேகரன் இயக்குகிறார்.

தமிழ் சினிமாவில் லவ்வர் பாய் மாதவன், தமிழ் சினிமாவின் செல்ஃப் மேட் நாயகன் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் போஸ்டரை நாளை (ஜூன் 6) காலை 11 மணிக்கு வெளியிடுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT