செய்திகள்

காதலை அறிவிக்கும் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா?

DIN

நாக சைதன்யா, சோபிதா காதல் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து, இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைக்க பலரும் முயன்றனர். இருப்பினும், அவர்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இதனைத்தொடர்ந்து, இந்த பிரபலங்கள் இருவரும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இறங்கினர்.

இதற்கிடையே, நடிகர் நாக சைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.

சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் லண்டன் ஹோட்டலில் ஒன்றாக இருந்த புகைப்படம் இணையத்தில் கசிந்து பேசு பொருளாகின. தொடர்ந்து, நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டுக்குள் சுற்றுலா செல்வது போன்ற புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

அதேபோல், சோபிதாவும் காட்டுக்குள் ஜீப்பில் செல்லும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இதனால், இருவரும் இணைந்தே சென்றதாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கச் சென்ற சோபிதா, நடிகர் நாக சைதன்யாவுடன் ஐரோப்பில் பயணம் மேற்கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பல இடங்களுக்குச் சென்றதாகவும் விரைவில் தங்கள் காதலை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT