முகப்பு
செய்திகள்

விரைவில் அமரன் வெளியீட்டுத் தேதி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்.

Updated On : 7 ஜூன், 2024 at 9:25 AM
பகிர்:

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், மறைந்த இராணுவ வீரர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன்நடித்துள்ளார்.

பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைமந்த இராணுவ வீரரின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அமரன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இது உருவாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →