மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் நடிகை மலைக்கா அரோரா. நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக மாறினார். நடனத்தினால் ஹிந்தி சினிமாவில் கவனம் பெற்றவர். தில் சே படத்தில் சைய்யா சைய்யா பாடலுக்கும், ஓம் சாந்தி ஓம் படத்திலும் நடனமாடி புகழ்பெற்றார்.
1998இல் தயாரிப்பாளர் அர்பாஜ் கானை திருமணம் செய்து 2017இல் விவாகரத்து பெற்றார். அடுத்ததாக தன்னைவிட வயதில் குறைவான நடிகர் அர்ஜுன் கபூரை 2019இல் திருமணம் செய்தார்.
தற்போது அர்ஜுன் கபூரை மலைக்கா அரோரா தனது 50ஆவது வயதில் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் மலைக்கா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்த ஸ்டோரி ரசிகர்களை குழப்பியுள்ளது.
மலைக்கா அரோரா வைத்த ஸ்டோரியில், “ உங்களை யார் அன்புடனும் மரியாதையுடனும் கருணையுடனும் நடத்துகிறார்களோ அவர்களே உங்களுடன் வாழத் தகுதியானவர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளார்கள். ஆனால் நடிகையின் மேலாளர் விவாகரத்து செய்திகள் எல்லாம் பொய்யானது, வெறும் வதந்தி மட்டுமே எனக் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.