செய்திகள்

கவுண்டமணியின் ’ஒத்த ஓட்டு முத்தையா’!

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ’ஒத்த ஓட்டு முத்தையா’.

இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் ரவிமரியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஓஏகெ சுந்தர், வையாபுரி, சிங்கமுத்து ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசியல் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். சினி கிராஃப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவிராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பதவியேற்பு விழா என்னும் வாசகத்துடன் ’மிக விரைவில் பொதுமக்களையும் சந்திக்க உள்ளனர்’ என்று போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT