படம்: இன்ஸ்டாகிராம்/சமந்தா 
செய்திகள்

ஆசிரமத்தில் சமந்தா!

ஈஷா யோகா மையத்தில் சமந்தா தியானம்.

DIN

கோவை ஈஷா யோகா மையத்துக்கு நடிகை சமந்தா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டுள்ளார்.

தற்போது மீண்டும் படத்தில் நடிக்க தயாராகும் சமந்தா, சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளனர். அதன் முதல் படமாக, ‘மா இண்டி பங்காரம்’ உருவாகிறது. அதில் ஆக்சன் நாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்வதை போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை பகிர்ந்து சமந்தா பதிவிட்டிருப்பதாவது:

“நம்மில் பலரும் குரு அல்லது ஆலோசகரை தேடுகிறோம். நம் வாழ்க்கையை ஒளிரச் செய்பரைக் காண்டால், அது அரிய பாக்கியமாகும். ஞானம் வேண்டுமென்றால், அதனை உலகில் நீங்கள்தான் தேட வேண்டும்.

ஏனென்றால் நாள்தோறும் உங்கள் மீது பல்வேறு விஷயங்கள் திணிக்கப்படுகிறது. ஞானத்தை பெறுவது சாதாரணமானது அல்ல. அதற்காக நீங்கள்தான் உழைக்க வேண்டும்.

நீங்கள் பலவற்றை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டும் போதாது. அதனை செயல்படுத்துவதே முக்கியமானது.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி கோவை ஈஷா யோகா மையத்துக்கு செல்லும் சமந்தா தியானத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

குறிப்பாக ஆண்டுதோறும் ஈஷா யோகா மையத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறும் சிவராத்திரி விழாவில் சமந்தா கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT