செய்திகள்

காதலரைக் கரம்பிடிக்கும் சோனாக்‌ஷி சின்ஹா?

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பாலிவுட்டில் டபாங் படத்தின் மூலம் 2010-ல் நாயகியாக அறிமுகமானவர் சோனாக்‌ஷி சின்ஹா. தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். ஹிந்தியில் பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

தொடர்ந்து, சில தோல்விப் படங்களை அடுத்தடுத்து கொடுத்ததால், ரசிகர்களின் தேடுதலில் இருந்து சோனாக்‌ஷி காணாமல் போனார். ஆனாலும், முன்னணி இயக்குநர்களின் தேர்வு பட்டியலில் இன்றும் இருக்கிறார்.

இறுதியாக, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி எனும் இணையத்தொடரில் வில்லியாக நடித்திருந்தார். தற்போது, இரு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், 37-வயதாகும் சோனாக்‌ஷி சின்ஹா தன் காதலரான நடிகர் ஜாகீர் இக்பாலை திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வருகிற ஜூன் 23 ஆம் தேதி இருவரும் பதிவுத் திருமணம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

டபுள் எக்ஸ்எல் (Double XL) திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT