மகனுடன் கிரிக்கெட் விளையாடிய அஜித்!
நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்திற்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன், போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
தற்போது, குட் பேட் அக்லியின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் அஜித் ஓய்வு நாளில் தன் மகனுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.