முகப்பு
செய்திகள்

இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்: விஜய் சேதுபதி

மணிரத்னம் திரைப்படம் குறித்து விஜய் சேதுபதி...

Updated On : 24 பிப்ரவரி 2026, 1:36 pm IST
விஜய் சேதுபதி, மணிரத்னம்
பகிர்:

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் நடிகர் துருவ் விக்ரமை வைத்து காதல் திரைப்படமொன்றை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், துருவ் தமிழ் - தெலுங்கில் தயாராகும் காதல் கதையில் நடிக்கவுள்ளதாகவும் அதனை அறிமுக இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவியை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் சேதுபதி நேர்காணலில் பேசியுள்ளார்.

அதில், ”இயக்குநர் மணிரத்னத்துடன் 2018 ஆம் ஆண்டு செக்கச் சிவந்த வானம் திரைப்படத்திலேயே பணியாற்றினேன். ஆனால், இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். திரும்பத் திரும்ப ஒன்றைச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான் ரீமேக்குகளில் நடிப்பதில்லை. கலை உலகை ஒன்றிணைக்கிறது. அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.