செய்திகள்

லக்கி பாஸ்கர் முதல் பாடல்!

DIN

'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மானின் நடிப்பில் இறுதியாக வெளியான 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தக் லைஃப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான அவர், பின்னர் அப்படத்திலிருந்து விலகினார்.

இதற்கிடையே, நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. மேலும், இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடலான ‘கொல்லாதே’ பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் விக்னேஷ் ராமகிருஷ்ணா வரிகளில் ஆனந்த் அரவிந்தக்‌ஷன், ஸ்வேதா மோகன் குரலில் இப்பாடல் உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT