காயங்களுடன் நடிகை பிரியங்கா சோப்ரா.  படங்கள்: இன்ஸ்டா / பிரியங்கா சோப்ரா
செய்திகள்

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு என்னாச்சு?

நடிகை பிரியங்கா சோப்ரா காயத்துடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகை பிரியங்கா சோப்ரா காயத்துடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழன் திரைப்படம் மூலமாக 2002-இல் நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, சமீபகாலமாக ஆங்கிலப் படங்கள், வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு டிசம்பரில் பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

அமேசான் ஸ்டுடியோஸ் தயாரித்த சிட்டாடல் தொடரில் ப்ரியங்கா சோப்ரா, சமந்தா, ரிச்சார்ட் மேட்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூஸோ சகோதரர்கள் இயக்கும் எபிசோடில் சமந்தா, வருண் தவானும் நடிக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா இந்தத் தொடரில் முதன்மை கதாபத்திரமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ரா

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலில் காயம் இருக்கும் புகைப்படத்தினை ஸ்டோரியில் வைத்திருந்தார். பின்னர் விடியோவாக வெளியிட்டு இருந்தார். அதில் பார்க்கும்போது முகம் முழுவதும் ரத்தம் இருக்கும் விடியோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.

இது ’தி பிளஃப்’ படத்தின் படப்பிடிப்பு விடியோவாக இருந்தாலும் ரசிகர்கள், ”உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்” “என்னாச்சு” என கமெண்ட்டுகளில் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT