dot com
செய்திகள்

நடிகர் விஜய்யின் `கோட்’ அப்டேட் வெளியானது

`கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது

DIN

`கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது.

நடிகர் விஜய் நடித்து வரும் `கோட்’ திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று (ஜூன் 21) மதியம் வெளியிடப்படும் என்று, படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இன்று மதியம் 12 மணியளவில் `கோட்’ திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, நாளை (ஜுன் 22) நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, நடிகர் விஜய் நடிக்கும் `கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை வெளியாகவுள்ள `கோட்’ படத்தின் பாடலான `சின்ன சின்ன கண்கள்’ பாடலை, நடிகர் விஜய் பாடியுள்ளார்.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இருப்பினும், நடிகர் விஜய் நாளை (ஜூன் 22) தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சி மக்களுக்கு உதவுமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT