விஜய் சேதுபதியின் அடுத்த பட இயக்குநர் இவரா?
செய்திகள்விஜய் சேதுபதியின் அடுத்த பட இயக்குநர் இவரா?
நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும் நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன. இப்படம் ரூ.60 கோடி வரை வசூலித்துள்ளது.
தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘ஏஸ்’ திரைப்படம் திரைக்கு வருகிறது. இதற்கிடையே, அடுத்ததாக விஜய் சேதுபதி எந்த இயக்குநருடன் இணைய உள்ளார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் புதிய படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இத்தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியாக, பாண்டிராஜ் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய எதற்கும் துணிந்தவன் கலவையான விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது.