நடிகை சாயிஷா மீண்டும் சினிமாவில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
நடிகை சாயிஷா தெலுங்கில் அகில் என்கிற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தமிழில் வனமகன் படத்திலிருந்து துவங்கியவர் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, காப்பான், டெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதன்பின், நடிகர் ஆர்யாவைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்ததால், மகளைக் கவனிக்கும் பொறுப்புகளில் சாயிஷா பிஸியானார்.
பின், பத்துதல திரைப்படத்தில் ‘ராவடி’ என்கிற குத்துபாடல் ஒன்றில் நடனமாடி வைரலானார். ஆனால், தொடர்ந்து நடிக்கவில்லை. இந்த நிலையில், நடிகை சாயிஷா மீண்டும் சினிமாவில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்காக, கதைகளைக் கேட்டு வருவதாகவும் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.