பா. இரஞ்சித் தயாரிப்பில் பாட்டல் ராதா!
இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்கள் தயாரித்து வருகிறார்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பல்வேறு படங்களை அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜே பேபி, தண்டகாரண்யம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், பா. இரஞ்சித் தன் இணை இயக்குநரான தினகரன் சிவலிங்கம் என்பவரை தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்திற்கு, ‘பாட்டல் ராதா’ எனப் பெயரிட்டுள்ளனர்.
மதுப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் எனத் தெரிகிறது. இதில், நாயகனாக குரு சோமசுந்தரம் நடிக்கிறார். மேலும், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை - ஷான் ரோல்டன்.