வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?
வேள்பாரி குறித்து...
இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ள வேள்பாரி திரைப்படத்தின் தயாரிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.
அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படமும் தோல்வியையே சந்தித்தது.
Advertisement
Advertisement
இதனால், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மீதான வணிக பார்வைகளும் மாறத்துடங்கின.
தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டு அதற்கான எழுத்து பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வேள்பாரியைத் தயாரிக்க பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பென் மீடியா (pen media) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
director shankar and velpari movie production
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.