FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

துரந்தர் - 2 கால அளவு 4 மணி நேரமாம்!

துரந்தர் - 2 மிக அதிக நேரம் ஓடக்கூடிய திரைப்படமாக உருவாகியுள்ளது....

Updated On : 2 மார்ச் 2026, 1:27 pm IST
பகிர்:

துரந்தர் - 2 திரைப்படத்தின் கால அளவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நாயகனாக நடித்து கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான “துரந்தர்” திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.

நடிகர்கள் மாதவன், அக்‌ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தை இயக்குநர் ஆதித்யா தார் தயாரித்திருந்தார்.

Advertisement

Advertisement

முதல் பாகம் ஏற்படுத்திய அதிர்வால் பல மொழி ரசிகர்களும் இதன் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவெஞ் திரைப்படத்திற்காகக் காத்திருக்கின்றனர். இப்படம் பான் இந்திய வெளியீடாக வருகிற மார்ச் 19 ஆம் தேதி உலகளவில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இந்த நிலையில், சென்சாருக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இப்படத்தின் வடிவம் 3.55 மணி நேரம் ஓடக்கூடியதாக உள்ளதாம்.

முதல் பாகம் 3.30 மணி நேரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், இரண்டாம் பாகம் 4 மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

summary

reports suggests dhurandhar the revenge movie time duration has 3.55 hour

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments