செய்திகள்

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை வீரர்களை சந்தித்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் சிசிஎல் போட்டியாளர்களை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

DIN

நடிகர் ரஜினிகாந்த் சிசிஎல் போட்டியாளர்களை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சிசிஎல் என்பது நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஆகும். சினிமா பிரபலங்கள் விளையாடும் இந்தக் கிரிக்கெட் தொடர் 2011 முதல் நடைபெற்று வருகிறது.

2011இல் 4 அணிகளாக இருந்த சிசிஎல்-இல் தற்போது 8 அணிகள் இருக்கின்றன. தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகார், பஞ்சாப் என 8 மாநிலங்களில் இருந்து 8 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை ரைனோஸ், கேரள ஸ்டிரைக்கர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடக புல்டோசர், பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி டபாங்க்ஸ், பஞ்சாபி டி ஷேர் என 8 அணிகளின் சினிமா பிரபலங்கள் பங்கேற்கிற்கிறார்கள்.

பிப்.23ஆம் நாள் முதல் இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நமது சென்னை ரைனோஸ் அணி முதல் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தியது. தற்போது 2வது போட்டியில் இன்று மாலை ஹதராபத்தில் போஜ்புரி அணியுடன் மோதவிருக்கிறது. சென்னை அணிக்கு நடிகர் ஆர்யா கேப்டனாக செயல்படுகிறார்.

இதற்காக ஹைதராபாத் சென்ற சென்னை ரைனோஸ் அணி நடிகர் ரஜினிகாந்த்தை ஹைதராபாத்தில் சந்தித்தார்கள். நடிகர் ரஜினி வேட்டையன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். இங்கு விமானத்தில் நடிகர் ஜீவா உள்பட பல நடிகர்கள் ரஜினியை சந்தித்து பேசினார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT