செய்திகள்

மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள்: அமீர் வெளியிட்ட புதிய விடியோ!

இறைவன் மிகப்பெரியவன் படத் தயாரிப்பாளர் விவகாரம் தொடர்பாக இயக்குநர் அமீர் புதிய விடியோவினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

Dineshkumar

இறைவன் மிகப்பெரியவன் படத் தயாரிப்பாளர் விவகாரம் தொடர்பாக இயக்குநர் அமீர் புதிய விடியோவினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தை ஜாஃபர் சாதிக் என்பவர் தயாரித்து வந்தார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் போதைப்பொருள் கடத்தியதாக ஜாஃபர் சாதிக் தில்லியில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம், சினிமாத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இயக்குநர் அமீர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

அமீர் இது குறித்து ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 22-ம் தேதி நான் "இறைவன் மிகப் பெரியவன்" திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.!” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் விடியோவாக வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அமீர் கூறியதாவது:

இறைவன் மிகப்பெரியவன் படத் தயாரிப்பாளர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெளிவாக கூறிய பிறகும், சில என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், செய்தியாளர்கள் தொடச்சியாக சமூக வலைதளப் பக்கங்களிலும் ஊடகங்களிலும் என்னை அந்தக் குற்றச் செயலோடு தொடர்புபடுத்தி பேசுகிறார்கள்.

அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி இதுபோன்ற விசயங்களுக்கு எதிரான சித்தாந்தத்தைக் கொண்ட மார்க்கத்தை பின்பற்றுபவன் நான். அப்படி இருக்கையில் என்னை இதுபோன்ற குற்றச் செயல்களோடு தொடர்புபடுத்தி பேசுவதனால் எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த முடியுமே தவிர, எனது குடும்பத்துக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே தவிர வேறு எந்தப் பயனையும் நீங்கள் அடையமுடியாது. நீங்கள் சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க காவல்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட துறை சார் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எபோது என்னை விசாரணைக்கு அழைத்தாலும் நான் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். இந்தச் சோதனையான காலகட்டத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இறைவன் மிகப் பெரியவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT