வேட்டையன் அப்டேட்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் வேட்டையன் படப்பிடிப்பின் அப்டேட்.
ஜெயிலர், லால் சலாம் படத்தின் வெற்றியைதைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்று வருகிறது.
இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் ராணா டக்குபதி இப்படப்படிப்பில் கலந்துகொண்டுள்ளார். மகிழ்ச்சியுடன் புகைப்படம் வெளியிட்டு தன் முதல்நாள் படப்பிடிப்பை தெரிவித்துள்ளார்.