செய்திகள்

நடிகர் அஜித் குமார் நலமுடன் வீடு திரும்பினார்!

சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து நடிகர் அஜித் குமார் வீடு திரும்பினார்.

DIN

துணிவு படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்தது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் வெளிநாட்டில் நிகழ உள்ளதால், நடிகர் அஜித் குமார் சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து நடிகர் அஜித் குமார் வீடு திரும்பினார்.

இந்நிலையில், “கடந்த 2 நாள்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீகம் இருந்ததால் சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு ஓய்வில் இருந்த நடிகர் அஜித் இன்று அதிகாலை வீடு திரும்பினார். அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் விடாமுயற்சி திரைப்பட படப்பிடிக்கு அஜித் செல்வார்” என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் பழனிசாமி, நடிகர்கள், நடிகைகள், சினிமா ரசிகர்கள் பலரும் அஜித்தினை விரைவில் நலம்பெற வேண்டி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்பல்லோவில் 6,000 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை

தொழிலதிபருடன் விடுதியில் அறை எடுத்து தங்கி நகை திருட்டு: தோழி கைது!

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு: நாளை முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னை-திருச்சி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT