விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் நடித்துவந்த நடிகர் திரவியம் புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் இந்தத் தொடரில், நடிகர் திரவியமிற்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார்.
சரவணன் மீனாட்சி, மகாநதி, பாரதி கண்ணம்மா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களை இயக்கியவர் இயக்குநர் பிரவீன் பென்னட்.
இவர் தற்போது திரவியம் - ஸ்ரீதா சிவதாஸ் ஜோடியை வைத்து புதிய தொடரை இயக்குகிறார். குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கும் இந்தத் தொடரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் திரவியம். அத்தொடரில் நடிகை ஸ்வாதியுடனான இவரி நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
தற்போது திரவியம் ஒப்பந்தமாகியுள்ள தொடரின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், இத்தொடரில் நடிக்கவுள்ள சக நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடரில் ஷாக்ஷி சிவா, நிமிஷா, சம்ரிதா, யமுனா சின்னதுரை, அவினாஷ், சுகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
தில்லுக்கு துட்டு திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீதா சிவதாஸ். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மீனாட்சி தொடரிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.