DOTCOM
செய்திகள்

அதிகம் வசூலித்த முதல் மலையாளப் படம்.. மஞ்ஞுமல் பாய்ஸ் சாதனை!

மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

DIN


கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்ஞுமல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் 500 திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ.175 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதால் இதுவே அதிகம் வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது. மேலும், ரூ.200 கோடி வசூலிக்கவுள்ள முதல் மலையாளத் திரைப்படம் என்கிற பெருமையயும் மஞ்ஞுமல் பாய்ஸ் அடையவுள்ளது.

முன்னதாக, ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கத்தில் வெளியான 2018 திரைப்படமே மலையாளத்தில் அதிகம் வசூலித்த திரைப்படமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிகரித்து வரும் எண்மக் கைது மோசடி: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

13 பவுன் நகைகள் திருடியவா் கைது

சட் பூஜை திருவிழா தொடங்கியது: பிரதமா் மோடி வாழ்த்து

வியன்னா ஓபன்: இறுதியில் சின்னா்

தீபாவளிக்கு பின் மோசமாக பாதிப்படைந்த தில்லி காற்றின் தரம்

SCROLL FOR NEXT