செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

சினிமா ரசிகர்கள் தற்போதுள்ள சூழலில் திரையரங்குகளுக்கு சென்று படங்களைப் பார்ப்பதைக் காட்டிலும், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த பிப்.15 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரம்மயுகம். இப்படம் வருகிற மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சென்ற வாரம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிய ஹனுமான் படம், ஹிந்தி மொழி ரீமேக்கில் ஜீ5 தளத்தில் மார்ச் 15-ல் வெளியாகிறது.

மர்டர் முபாரக் என்ற ஹிந்தி திரைப்படம் மார்ச் 15-ல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. இப்படத்தில் சாரா அலிகான், விஜய் வர்மா, கரிஷ்மா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சென்ற வாரம் விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்துமஸ்', யோகி பாபுவின் ‘தூக்குதுரை’, சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி, ஹார்ட் பீட் இணையத் தொடர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்தியப் பிரதேசம்: நர்மதா நதிக்கரை அருகே இறந்த நிலையில் 200 கிளிகள் கண்டெடுப்பு

சாகித்திய சம்மான் விருது விழா: புனைவுக்கான பிரிவில் விருது பெற்ற எழுத்தாளர் சுபி தாபா!

சாய் சுதர்சனுக்கு காயம்; 6 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாடுவது கடினம்!

நீதிக் கதைகள்! குல்பி ஆமையின் நன்னயம்!

ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் வீரரின் தலைக்கவசத்தில் பாலஸ்தீன கொடி! காவல் துறை விசாரணை!

SCROLL FOR NEXT