ராம் சரண்  படம்: எக்ஸ் / டேவிட் பாலா
செய்திகள்

இதுவரைப் பார்க்காத ராம் சரண்: ‘கேம் சேஞ்சர்’ புகைப்படம்!

நடிகர் ராம் சரணின் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் ராம் சரணின் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் தான் தமன் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் புதிதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதாவது இந்தப் படத்தின் கதையை எழுதியது கார்த்திக் சுப்புராஜ். 

தயாரிப்பாளர் தில் ராஜு படம் 2024 செப்டம்பர் மாதம் வெளியாகும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் முகச்சவரம் செய்து ராம் சரண் அரசாங்க அதிகாரி போல காட்சியளிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT