படம்: இன்ஸ்டா / ஆலியா பட்
செய்திகள்

31வது பிறந்தநாள் எப்படி இருந்தது? பதிலளித்த ஆலியா பட்!

நடிகை ஆலியா பட் தனது 31ஆவது பிறந்தநாள் குறித்து பதிவிட்டுள்ளார்.

DIN

நடிகை ஆலியா பட் தனது 31ஆவது பிறந்தநாள் குறித்து பதிவிட்டுள்ளார்.

2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான நடிகை ஆலியா பட் கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார். அவரது நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.

தேசிய விருது பெற்ற ஆலியா பட்.

ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவருகிறார் ஆலியா பட். தற்போது, ஜிக்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நடிகர் ரன்பீர் கபூரை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ராஹா எனும் பெண் குழந்தை கடந்தாண்டு டிசம்பரில் பிறந்தது.

ஜிக்ரா படப்பிடிப்பில்..

சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் கணவர் ரன்பீருடன் லவ் அன்ட் வார் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று (மார்ச்.15) தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடினார் ஆலியா பட். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். தனது இன்ஸ்டாகிராமில் நேற்றைய நாள் சிறப்பாக சென்றதாகவும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறியும் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் இபிஎஸ்தான்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி; இரும்பு மனிதர் அமித் ஷா: செங்கோட்டையன்

நேபாளத்தில் வன்முறை: விமான சேவைகள் நிறுத்தம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT