மிரட்டும் கங்குவா டீசர்!
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்துள்ளார்.
அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.
Advertisement
Advertisement
தற்போது, படத்தின் அடுத்தக்கட்ட பணிகளைப் படக்குழு துவங்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாக நடிகர் சூர்யா தன் டப்பிங் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்தாண்டு ஏப்ரல் வெளியீடாக திரைக்கு வர உள்ளதால் தயாரிப்பு நிறுவனம் படத்தின் பணிகளை முடிக்க தீவிரம் காட்டியுள்ளது.
இந்த நிலையில், கங்குவா படத்தின் புதிய டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.