முகப்பு
செய்திகள்

இளையராஜா பயோபிக்: முதல் பார்வை போஸ்டர் வெளியானது!

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 20 மார்ச் 2024, 1:56 pm IST
பகிர்:

1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர்.

இதற்கிடையே, நீண்ட நாள்களாக இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்காக முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து திரைக்கதையை எழுதி வருவதாகவும் இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

Advertisement

Advertisement

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தொடர்பான துவக்க சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இளையராஜா, கமல்ஹாசன், தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர்.

இந்த நிலையில், இளையராஜா பயோபிக் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார், அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments