ஓவியாவின் ‘பூமர் அங்கிள்’ ரிலீஸ் தேதி!
நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள பூமர் அங்கிள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு ஓவியாவின் படம் வெளியாக இருக்கிறது. ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்குமார், ஏவிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து வழங்கும் இந்தப் படத்தினை தில்லைராஜா எழுத ஸ்வதேஷ் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஓவியா, ரோபோ ஷங்கர், எம்.எஸ். பாஸ்கர், ஷேஷு, பாலா, தங்கதுரை உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
பிக்பாஸில் பாதியிலேயே வெளியேறினாலும் அவருக்கு தனியாக ரசிகர்கள் உருவானார்கள். ஆனால் பிக் பாஸுக்கு பிறகு படங்கள் சரியாக அமையாமல் இருந்தார். எந்தப் படமும் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை.
Advertisement
Advertisement
தற்போது இந்த பூமர் அங்கிள் நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் கனவம் ஈர்த்துள்ளது.
இந்தப் படம் மார்ச்.29ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இதன் தமிழ்நாடு திரையரங்க உரிமத்தை ஏவிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.