செய்திகள்

2018 - 2024: ‘ஆடு ஜீவிதம்’ குறித்து அமலா பால் நெகிழ்ச்சி!

நடிகை அமலா பால் ஆடு ஜீவிதம் திரைப்படப் பயணம் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

DIN

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜுன் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.

பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வருகிற மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு.

2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில், "2018இல் தொடங்கிய நம்பமுடியாத பயணத்தினை பிரதிபலிக்கும் புகைப்படம். 2024ஆம் ஆண்டிலும் தொடர்கிறது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றியுடையவராக கருதுகிறேன்" எனக் கூறி 2018இல் எடுத்த புகைப்படத்தினயும் 2024இல் எடுத்த படத்தினையும் பத்விட்டுள்ளார்.

அமலா பால் சைனு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஜீப் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார். தற்போது புதிய பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அவரது கதாபாத்திரத்தின் போஸ்டரையும் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT