செய்திகள்

சாய் பல்லவியின் ‘தண்டேல்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்!

நடிகை சாய்பல்லவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

DIN

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படத்திற்கு தென்னிந்தியா  முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

சாய்பல்லவியின் கார்கி, விராட பருவம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். 

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் 23வது படமான ‘தண்டேல்’ படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். இந்தப் படத்தினை சந்தோ மோன்டெடி இயக்கி வருகிறார். நாக சைதன்யாவின் 22வது படம் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி மோசமான விமர்சனங்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தண்டேல் திரைப்படம் மீனவர்கள் பற்றிய படமாக இருக்கும். அதற்காக நாக சைதன்யா ஸ்ரீகாகுளம் பகுதியில் மீனவ சமூகத்தினரை சந்தித்தது பயிற்சி பெற்றதாகவும் தவல்கள் வெளியானது.

இந்நிலையில் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ஆர்வமான அப்டேட்டினை தெரிவிப்போமென படக்குழு கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT