செய்திகள்

கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ டிரைலர்!

DIN

கயல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. இப்படத்திற்குப் பின் பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களில் நடித்து கவனிக்கப்பட்டார்.

பின், 2021-ல் மூடர்கூடம் இயக்குநர் நவீனின் உறவினரான சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்த ஆனந்திக்கு ஒரு மகள் இருக்கிறார்.

விரைவில், ஆனந்தி நடித்த ‘மங்கை’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’.

இதில் நடிகர் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இதன் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஏப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT