முகப்பு
மகளிர்மணி

குல்கந்து கேக்

அகலமான பாத்திரத்தில் பொடித்த சர்க்கரையைப் போட்டு, அதனுடன் வெண்ணெய் சேர்த்து மிருதுவாக அடிக்கவும்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:23 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

குல்கந்து - அரை கிண்ணம்

பன்னீர் ரோஜா இதழ்கள்-6

ரோஸ் எசென்ஸ்- 2 துளிகள்

கெட்டித் தயிர்- ஒன்றரை கிண்ணம்

ஜாம்- 2 தேக்கரண்டி

வெண்ணெய்- அரை கிண்ணம்

பேக்கிங் பௌடர்- அரை தேக்கரண்டி

பால்கோவா, சோள மாவு- தலா கால் கிண்ணம்

பொடித்த சர்க்கரை, மைதா, கோதுமை மாவு-தலா 1 கிண்ணம்

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் பொடித்த சர்க்கரையைப் போட்டு, அதனுடன் வெண்ணெய் சேர்த்து மிருதுவாக அடிக்கவும். பின்னர் பால்கோவா, குல்கந்து, ரோஸ் எசென்ஸ் விட்டுக் கலக்கவும். கோதுமை, மைதா, பேக்கிங் பௌடரை சேர்த்து தயிர்க் கலவையில் ஊற்றி, கட்டியில்லாமல் கரைக்கவும்.

பின்னர், வெண்ணெய் தடவிய பேக்கிங் பௌலில் சேர்த்து மைதா தூவி வைக்கவும். 20 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்த அவனில் 180 செல்சியஸில் 1 மணி நேரம் பேக் செய்யவும். கேக் வெந்தவுடன் வெளியில் எடுத்து ஆறவிட்டு, ஜாம் தடவிப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.